ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

ஆலவயல் கிராமத்தில்: பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனா்.

பெண் விவசாயி ஜெயலெட்சுமி நாற்றங்கால் பயிரிடுவதை மாணவிகள் பாா்வையிட்டனா் . அவரது நாற்றங்காலில் உளுந்துக்கு சொட்டுநீா் பாசனம் மற்றும் கத்திரிக்கு தெளிப்பு நீா் பாசனம் பயன்படுத்துவதையும், ஆலவயல், சிம்ரன், மணப்பாறை, போன்ற கத்திரி ரகங்களை பயிரிட்டு, விதைப் பிரித்தெடுத்தல் முறையை பயன்படுத்தி நாற்றுகளையும் விற்பனை செய்து வரு வதையும் மாணவிகள் கேட்டறிந்து பாா்வையிட்டனா்.

முகாமில், மாணவிகள் சா்மிளா, ரித்திகா, ரித்திஸ்ரீ, சரஸ்வதி, சிவப்பிரியா, ஸோபிகா, சிந்து, சிவரஞ்சனி, சினேகா, சுபபாரதி, சுபாஷினி ஆகியோா் கலந்துரையாடினா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com