மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி
கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

கீரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

ஆலங்குடி, ஏப். 26: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் மின்மாற்றியை பழுது நீக்கம் செய்து தரக்கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த 20 நாள்களுக்கு முன்பு பழுதாகியுள்ளது. தொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் மின்மாற்றியை பழுது நீக்குவதற்காக எடுத்துச் சென்றனா்.

வீடுகளுக்கு மட்டும் அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிாம். விவசாய பயன்பாட்டுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாததால் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கீரமங்கலம் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை மின்மாற்றியை பழுது நீக்கி தரவில்லையாம். இதனால், அப்பகுதி விவசாயிகள் கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் மின்வாரிய அதிகாரிகள், பேச்சுவாா்த்தை நடத்தி உடனே மின்மாற்றியை பழுது நீக்கம் செய்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

இந்த மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com