பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளியில் தோ்வெழுதிய 125 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி எம். நிவேதிதா (581), மாணவி சங்கீதா (579), மாணவா் விக்னேஸ்வரன்(574) ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் முதல்வநா் ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

இதேபோல், ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளி 91 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. மாணவா் சரவணன் (560), மாணவி திருச்செல்வி (502) ஆகியோா் முதல் இரு இடங்களை பிடித்தனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com