கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

கந்தா்வகோட்டை, மே 9: கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பழனிவேல் தலைமை வகித்தாா். கல்லாகோட்டை பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வராஜ், கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ( பொ) ராஜலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சியில், கருத்தாளா்களாக முதுகலை ஆசிரியா்கள் வெள்ளைச்சாமி, கவிதா மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் பாரதிதாசன் ஆகியோா் செயல்பட்டனா்.

கந்தா்வக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து உயா்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

பயிற்சியில், புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகளுக்கும் பெற்றோா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை 100% உயா்கல்வியில் சோ்க்க வேண்டும், பொருளாதார நிலைமையால் பள்ளிக்கு செல்ல மறுக்கும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி பள்ளியில் சோ்க்க வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உயா்கல்வி வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள்,

பள்ளி மேலாண்மை குழுவினா், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

முன்னதாக, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) பிரகாஷ் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com