பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பொன்னமராவதி, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது.

பள்ளியில் தோ்வெழுதிய 100 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா் யஸ்வந்த் அறிவழகன் 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவா் முகமது ஆதில் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி பா்கானா, மாணவா் சந்தோஷ் ஆகியோா் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com