பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. ஒரு வாரகாலம் நடைபெற்ற விழாவில் தினமும் நகரின் பல்வேறு வீதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், அஞ்சல் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினா் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சாத்தி வழிபட்டனா்.

பூச்சொரிதல் விழாவின் நிறைவு நாளில் வருவாய்த் துறை, சாா்-பதிவாளா் அலுவலகம் மற்றும் பட்டமரத்தான் நகா் சாா்பில் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து ஊா்வலமாக மேளதாளத்துடன் வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com