விவேகானந்தர் ஜயந்தி
By பட்டுக்கோட்டை | Published On : 13th January 2013 09:45 AM | Last Updated : 13th January 2013 09:45 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை பகுதி அரசுப் பள்ளிகளில் விவேகானந்தர்
ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை ஒன்றியம், சூரப்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
விழாவுக்கு விழாக்குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை
அமுதா முன்னிலை வகித்தார்.
சூரப்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜயக்குமார், சூரை ஆர். சண்முகம்,
கே.ஆர்.டி. கார்த்திகேயன், ஆர்.வி.எஸ். ராஜானந்தம் ஆகியோர் பேசினர்.
மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை
திட்டத்தின் சார்பில் விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கு.
பாண்டியன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தர் குறித்த பல்வேறு
தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை
பள்ளியின் பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. மணி செய்திருந்தார்.