கும்பகோணத்தில் விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா
By கும்பகோணம் | Published On : 09th June 2015 02:51 AM | Last Updated : 09th June 2015 02:51 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் ராஜராஜேந்திரன்பேட்டையில் உள்ள இக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக தெய்வீக பேரவையினர் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டது. குடமுழுக்கு விழாவையொட்டி சனிக்கிழமை காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளும், முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இரவு விநாயகரின் சிறப்பு வீதியுலா நடைபெற்றது. ஜூன் 9ஆம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜை நடைபெற உள்ளது.