சுடச்சுட

  

  ஏழூர் பல்லக்கு பெருவிழா: மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி

  By கும்பகோணம்  |   Published on : 22nd April 2016 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணம் மங்களாம்பிகை உடனாகிய ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் சப்த ஸ்தான (ஏழூர் பல்லக்கு) விழாவை முன்னிட்டு மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  சப்த ஸ்தானப் பல்லக்கு உற்சவம் எனும் ஏழூர் பல்லக்கினை தரிசித்தால் ஏழு பிறப்புக்கும் வேண்டிய எண்ணற்ற புண்ணியங்கள் கிட்டும் என்பது ஐதீகம். தமிழகத்தில் சுமார் 10 திருக்கோயில்களில் மட்டுமே நடைபெறும் சப்த ஸ்தானப் பெருவிழா மகாமகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மங்களாம்பிகை உடனாகிய ஆதி கும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கியது.

  சப்த ஸ்தான பெருவிழாவையொட்டி, சித்ரா பெளர்ணமி கூடிய நாளான வியாழக்கிழமையன்று கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு மகாமகக் குளத்தை சென்றடைந்தது. அங்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மங்களாம்பிகை அம்மனுடன் ஆதி கும்பேஸ்வரசுவாமி எழுந்தருள இக்கோயிலின் அஸ்திர தேவருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களுடன் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற பின், மீண்டும் கோயிலை வந்தடைந்தது. வரும் ஏப். 23 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்படிகம், முத்துமணிகளால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்குகளில் விநாயகர் மற்றும் மங்களாம்பிகை, ஆதி கும்பேஸ்வசுர சுவாமி சப்த ஸ்தான பல்லக்கு (ஏழூர் பல்லக்கு) திருத்தலங்களுக்கு புறப்பாடு நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடைய உள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai