குடந்தையில் 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
By கும்பகோணம் | Published On : 04th February 2016 04:55 AM | Last Updated : 04th February 2016 04:55 AM | அ+அ அ- |

கும்பகோணம் பேட்டை ஆதிகாமாட்சி அம்மன் கோயில், பொய்யாத விநாயகர் கோயில் மற்றும் இலுப்பையடி தர்மராஜா திரெளபதியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களின் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இலுப்பையடி தர்மராஜா திரெளபதி அமமன் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன், காய்த்ரி காளியம்மன், மூலவர் பத்ரகாளி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆதிகாமாட்சியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதாó, விசாலாட்சி அம்மன், துர்க்கையம்மன், நவக்கிரஹங்கள், மதுரை வீரன், பைரவமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், பொய்யாத விநாயகர் கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்த கோயில்களில் விக்னேஸ்வரர் பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. அதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை இரவு முன்று கோயில்களின் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது.