காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்: பி.ஆர்.பாண்டியன்

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனங்களில் விழிப்புணர்வுப் பயணம் மேற்கொள்ளும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்தனர்.
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், ரயிலடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பேசிய அக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி டெல்டாவை அழித்து அதன்மூலம் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்காகவும், அதற்காக காவிரி நீரை விடாமல் தடுக்க பிரதமர் மறைமுகமாகச் செயல்படுகிறார்.
தமிழகத்தை அழிப்பதற்காக மத்திய அரசுடன், கர்நாடக அரசும் இணைந்து செயல்படுகிறது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும். இதனை வலியுறுத்தி காவிரி நீரை குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தும் 9 மாநகராட்சிகள் உள்பட 22 மாவட்டங்களில் 2,200 கி.மீ தொலைவுக்கு இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
வேதாரண்யத்தில் தொடங்கப்பட்ட இப்பயணம் கல்லணையில் புதன்கிழமை முடித்து, வியாழக்கிழமை திருச்சியில் இருந்து மேட்டூருக்கும், வெள்ளிக்கிழமை வேலூருக்கும், சனிக்கிழமை சென்னைக்கும் செல்லவுள்ளது. மேட்டூரில் கொளத்தூர் மணியும், வேலூரில் தமாகா தலைவர் ஜி.கே. வாசனும், சென்னையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர் என்றார் பாண்டியன். 
இவருடன், ஏறத்தாழ 60 இரு சக்கர வாகனங்களில் விவசாயிகள் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com