"பாரதியாரின் கவிதைகள் சாகாவரம் பெற்றவை'

குழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய கவிதைகள் சாகா வரம் பெற்றவை என்றார் பட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கச் செயலர் ந.மணிமுத்து.

குழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய கவிதைகள் சாகா வரம் பெற்றவை என்றார் பட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கச் செயலர் ந.மணிமுத்து.
பட்டுக்கோட்டை  பூமல்லியார்குளம் பாரதி சாலையில் உள்ள  நகராட்சி  தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 137-வது  பிறந்த  நாள் விழாவில் மேலும் அவர் பேசியது:
திருஞானசம்பந்தரால் சீர்காழி புகழ் பெற்றதைப் போல் மகாகவி பாரதியாரால் புகழ் பெற்று விளங்குகிறது எட்டயபுரம். 
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா,  மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா-என்ற இக்கவிதையை  பெண்களுக்கென்று ஐந்தாம் வேதமாக  அருளியவர்  பாரதியார். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்-இப்படியாகப் பெண் தர்மத்தைப் புதிதாகச் சொன்னவர் பாரதியார் என்றார் மணிமுத்து.
முன்னதாக, கஜா  புயலால்  பாதிக்கப்பட்ட  அப்பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு 400 நோட்டுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு  பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர்  கழகத்  தலைவர்  ஏ.கே.குமார் தலைமை  வகித்தார். தலைமை ஆசிரியை எஸ்.எம். ஜெயந்தி  வரவேற்றார்.  உதவி ஆசிரியை  ரெ.  நீலேஸ்வரி  நன்றி  கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com