தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 14 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அய்யம்பேட்டை 14, அணைக்கரை 9, மஞ்சலாறு 6.2, திருவிடைமருதூர் 5.6, கும்பகோணம் 5, குருங்குளம் 4, திருவையாறு 3, திருக்காட்டுப்பள்ளி 2.8, ஒரத்தநாடு 1.2, தஞ்சாவூர் 1.