திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா

தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா நள்ளிரவு வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.


தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா நள்ளிரவு வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவையில் உயிர்விட்ட இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ஈஸ்டர் பெருவிழாவாக உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களிலேயே மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் உள்ள தஞ்சை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமான திருஇருதய பேராலயத்தில் ஆயர் எம். தேவதால் அம்புரோஸ் தலைமையில் பாஸ்கா சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து புதுநெருப்பிலிருந்து ஆயர் பாஸ்கா திரியை ஏற்றி பவனியாக வர இறைமக்கள் அனைவரும் கையில் எரியும் மெழுகுதிரியை ஏந்தியவாறு பாஸ்கா பாடல் பாடினர்.
பின்னர் இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு நீர் புனிதம் செய்யும் சடங்கு மறையுரை மற்றும் கூட்டுப்பால் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குதந்தை சி. இருதயராஜ் அடிகளார், உதவி தந்தை ரீகன் ஜெயக்குமார், பங்கு பேரவைத் துணைத் தலைவர் வின்சென்ட், செயலர் குழந்தைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஈஸ்டர் பெருவிழா திருப்பலி முடிந்ததும், இயேசுவின் உயிர்த்த காட்சியை சித்தரிக்கும் நிகழ்ச்சி வியாகுல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பின்னர் உயிர்த்த ஆண்டவர் சொரூபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, மேரீஸ்கார்னர், சாந்தபிள்ளைகேட், பூச்சந்தை, வீரவாண்டையார்தெரு வழியாகப் பவனியாக கொண்டு வரப்பட்டு பேராலயத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com