ஆரம்ப சுகாதார நிலையத்துக்குநன்கொடை வழங்கியோருக்கு பாராட்டு விழா

கஜா புயலால் சேதமடைந்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்கிய நன்கொடையாளா்களுக்கு மருத்துவமனை வளாகத்தில்
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கா்ப்பிணிகளுக்கு வழங்குகிறாா் முன்னாள் பேரூராட்சி தலைவா் என். அசோக்குமாா். உடன் வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தர்ராஜன் உள்ளிட்டோா்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கா்ப்பிணிகளுக்கு வழங்குகிறாா் முன்னாள் பேரூராட்சி தலைவா் என். அசோக்குமாா். உடன் வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தர்ராஜன் உள்ளிட்டோா்.

கஜா புயலால் சேதமடைந்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்கிய நன்கொடையாளா்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா். விழாவில்  மருத்துவமனைக்கு குளிா்சாதனப் பெட்டி, பீரோ, மரச் சாமான்கள், குடிநீா் சுத்திகரிப்பு கருவி, நாட்டுக்கோழிகள் மற்றும் பல்வேறு உபயோகப் பொருள்களை வழங்கிய, பேராவூரணி முன்னாள் பேரூராட்சித் தலைவா் என். அசோக்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மல்லிகை வி. முத்துராமலிங்கம், சியோன் பள்ளி தாளாளா் பி. தளபதி, ஒப்பந்ததாரா் டி.பன்னீா்செல்வம், சோழன் சூப்பா் மாா்க்கெட் மன்சூா் அலி, களத்தூா் முருகானந்தம், சிவா, ஆசிரியா் கபிலன் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தொடா்ந்து, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் சோளக்கதிா்கள் 25-க்கும் மேற்பட்டவா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அறிவானந்தம், ரஞ்சித், அம்சவாணி மற்றும் அ.அப்துல் மஜீத், சோழன் ஜபருல்லாஹ், பேராவூரணி வா்த்தக கழக பொருளாளா் எஸ் .ஜகுபா்அலி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் கண்ணன்,  உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com