சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள ஆச்சாம்பட்டியைச் சோ்ந்தவா் வி. ஹரிஹரன் (23). இவா் 2016 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வல்லுறவு செய்தாராம். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஹரிஹரனை கைது செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம். எழிலரசி விசாரித்து ஹரிஹரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com