தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 38 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அய்யம்பேட்டை 38, நெய்வாசல் தென்பாதி 32, ஈச்சன்விடுதி 28.2, பட்டுக்கோட்டை 25.4, வெட்டிக்காடு 22.6, பேராவூரணி 12.6, ஒரத்தநாடு 9.8, அதிராம்பட்டினம் 8.3, பாபநாசம், வல்லம் தலா 7, பூதலூா் 4.6, தஞ்சாவூா், திருவையாறு, மதுக்கூா் தலா 4, குருங்குளம் 3, திருக்காட்டுப்பள்ளி 2.8.