தேர்தல் கண்காணிப்பில் 81 நுண் பார்வையாளர்கள்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் 81 நுண் பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார் ஆட்சியரும்,  மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஆ. அண்ணாதுரை.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் 81 நுண் பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார் ஆட்சியரும்,  மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஆ. அண்ணாதுரை.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நுண் பார்வையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தெரிவித்தது:
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 10 நுண் பார்வையாளர்களும், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 நுண் பார்வையாளர்களும், ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் 17 நுண் பார்வையாளர்களும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 13 நுண் பார்வையாளர்களும், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 11 நுண் பார்வையாளர்களும், மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 15 நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 81 நுண் பார்வையாளர்கள் வாக்குப் பதிவின்போது கண்காணிப்பில் ஈடுபடுவர்.
தவிர, மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவின் போது கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மக்களவைத் தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நுண் பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணி மேற்கொள்ளவுள்ள நுண் பார்வையாளர்கள் தேர்தல் வாக்குப்பதிவின் போது மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். 
நுண்பார்வையாளர்கள் பணி மேற்கொள்ளவுள்ள வாக்குச் சாவடிகளில் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜெகதீஷ்வர், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர் நரேந்திர சங்கர் பாண்டே, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com