ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு அரசு நிதியுதவி

ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் நிதியுதவி பெற ஆக. 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் நிதியுதவி பெற ஆக. 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ. 20,000 நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்துவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள் - அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இப்புனிதப் பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மதம் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப் பயணம் நிகழாண்டு அக்டோபர் முதல் 2020 மார்ச் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர, 
w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கியும் பயன்படுத்தலாம். இத்திட்டத்துக்கான நிபந்தனைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில்"கிறிஸ்துவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019 - 20"எனக் குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு ஆக. 30-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். நேரில் வர வேண்டியதில்லை.
மேலும் விவரங்களுக்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 04362 - 278416 என்ற எண்ணிலும், சென்னை சிறுபான்மையினர் நல இயக்குநரகத்தை 044 - 28520033 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com