ஆம்பலாப்பட்டு மக்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தல் 

ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:
 ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாபட்டு தெற்கு மற்றும் வடக்கு கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களைத் தங்களது கிராமத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி ஆக. 12-ம் தேதி கிராமத்தின் பல பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 பாதுகாப்பான வேளாண்மை மண்டலத்தை முன்வைத்தும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களுக்கு எதிராகவும் தங்களது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் ஆம்பலாப்பட்டு கிராம மக்களின் உறுதிமிக்க செயல்பாடு பாராட்டுக்குரியது.
 இந்நிலையில் இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியத் துணைச் செயலர் மு. கோசிமின், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் வாசு. இளையராஜா, சிபிஎம்எல் மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாதவன், வெங்கடேசன் உள்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
 தஞ்சாவூர் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டு இயக்கத்தினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் கிராம மக்கள் தவறாமல் பங்கேற்று ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்தும், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் தீர்மானங்களை முன்மொழிந்து மிகுந்த விழிப்புடன் இருந்து நிறைவேற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com