புதுப்பொலிவு பெற்ற பிலால் நகர் பள்ளிவாசல் 

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டி அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டி அமைந்துள்ளது பிலால் நகர். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகிய தொழுகைக்காக  17 ஆண்டுகளுக்கு முன்  பிலால் நகரில் தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜித்  கட்டப்பட்டது.
இந்த பள்ளிவாசலில் வழக்கமாக தினமும் 5 வேளை தொழுகை, மாலைங்களில் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதுதல் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி, அவ்வப்போது மஹல்லாவாசிகளின் திருமண நிகழ்ச்சி ஆகியவை  நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வண்ணம் பூசும் பணி தொடங்கி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவு பெற்றதையடுத்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பிலால் நகர் ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜித்தின் அழகிய வெளிப்புற, உள்புற தோற்றம் தொழுகையாளிகளையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com