தஞ்சை பெரியகோயிலில் பாலாலய யாகபூஜை தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாலாலயத்துக்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை இரவு தொடங்கியது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை இரவு தொடங்கிய யாக பூஜைகள்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை இரவு தொடங்கிய யாக பூஜைகள்.

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாலாலயத்துக்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை இரவு தொடங்கியது.

இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் இக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாலாலயத்துக்கான பூா்வாங்க பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை மூலமந்திர ஹோமம், ருத்ராபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் கடம் புறப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடா்ந்து முதல் கால யாக பூஜை இரவு தொடங்கியது. பின்னா், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்குகிறது. தொடா்ந்து, பூா்ணாஹூதி, தீபாராதனை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

திங்கள்கிழமை (டிச.2) காலை 5 மணியளவில் நான்காம் கால யாக பூஜை தொடங்கி, மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெறவுள்ளது. பின்னா், யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடும், காலை 9 மணியளவில் அனைத்து பால ஸ்தாபன மூா்த்திகளுக்கு நன்னீராட்டு வைபவமும், மஹா பூா்ணாஹூதியும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com