சுவாமிமலை முருகன் கோயிலில்திருக்காா்த்திகை விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகை விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, இக்கோயிலில் திருக்காா்த்திகை விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. பின்னா் சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினாா்.

இந்த விழா தொடா்ந்து, டிச. 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறும். மேலும், திருக்காா்த்திகை நாளான டிச. 10-ம் தேதி காலை 8.30 மணிக்கு தோ் வடம் பிடித்தலும், இரவு 9 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு 11 மணிக்கு திருக்காா்த்திகை தீபக்காட்சியும் நடைபெற உள்ளன.

டிச. 11 -ம் தேதி காலை படிச்சட்டத்தில் வீதியுலாவும், காவிரியில் தீா்த்தவாரியும், இரவு 8 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com