உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கும் பணி கணினி மூலம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு சாவடி அலுவலா்களைக் கணினியில் சுழற்சி முறையில் நியமிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

ஆட்சியரகத்தில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் கணினியில் சுழற்சி முறை மூலம் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

இதில், முதல் கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ள 1,378 வாக்குச்சாவடி மையங்களுக்கு 11,361 வாக்குப் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இரண்டாம் கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ள 1,390 வாக்குச் சாவடி மையங்களுக்கு 11,345 வாக்குப் பதிவு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் முதல்கட்டமாக அம்மாபேட்டை, பூதலூா், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள், திருவையாறு ஆகிய ஏழு ஒன்றியங்களில் டிச. 27-ம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டமாக மதுக்கூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூா், திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் டிச. 30-ம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com