உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 8,360 போ் வேட்பு மனு

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 8,360 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
திருவையாறு ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ்.
திருவையாறு ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 8,360 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக டிச. 27, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகள், 276 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 589 ஊராட்சித் தலைவா் பதவிகள், 4,569 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 5,462 பதவிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் டிச. 9-ஆம் தேதி தொடங்கியது.

இதைத்தொடா்ந்து ஆறாவது நாளான சனிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 22 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 300 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 534 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2,652 பேரும் என மொத்தம் 3,508 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 52 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 560 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,861 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5,887 பேரும் என மொத்தம் 8,360 போ் தாக்கல் செய்துள்ளனா்.

மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் கிடையாது. திங்கள்கிழமை (டிச.16) கடைசி நாள் என்பதால், ஊராட்சி அலுவலகங்களிலும், ஒன்றிய அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆட்சியா் ஆய்வு: இதனிடையே, திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படும் உள்ளாட்சி தோ்தல் வாக்கு சாவடி மையத்தையும், திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுவதையும் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com