தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

தஞ்சாவூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  அதிமுக,  அமமுக சார்பில் மறைந்த முன்னாள்

தஞ்சாவூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  அதிமுக,  அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் மெளன ஊர்வலமாகப் புறப்பட்ட அதிமுகவினர் காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாக ரயிலடியைச் சென்றடைந்தனர். பின்னர், ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
இதில், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் தெற்கு மாவட்ட மாணவரணிச் செயலர் ஆர். காந்தி, முன்னாள் தொகுதி செயலர் துரை. திருஞானம், பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆதரவற்றோர் இல்லம், பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச காலை உணவும், மாநகரில் 2,000 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் அமமுக சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், அமமுக பொருளாளர் எம். ரெங்கசாமி, மாநகர மாவட்டச் செயலர் ராஜேஸ்வரன், மாணவரணி செந்தில் பல்லவராயர், எம்.என். துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பேராவூரணி:   அதிமுக மாணவரணி சார்பில், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து 18வார்டுகளிலும் அதிமுக கொடி ஏற்றப்பட்டது .
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு,  ஒன்றியச் செயலர்  உ.துரைமாணிக்கம்  நகரச்செயலர் வி.என். பக்கிரிசாமி  மாவட்ட மாணவரணி இணைச் செயலர் ஆர்.பி.ராஜேந்திரன், நகர மாணவரணி செயலர்  கோவி. இளங்கோ உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 
பட்டுக்கோட்டை:    பட்டுக்கோட்டையில் அமமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு அமைப்புச் செயலர்  பண்ணைவயல் க.பாஸ்கர் தலைமை வகித்தார். அம்மா பேரவைத் துணைச் செயலர் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், முன்னாள் நகர் மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு,   நகர கழகத் தலைவர் வி.எம்.பாண்டியராஜன் ஒன்றியச் செயலர்கள் தம்பி.ரமேஷ், பி.ரவிஉள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com