சிறையிலுள்ள ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்திப்பு
By DIN | Published On : 29th January 2019 04:23 AM | Last Updated : 29th January 2019 04:23 AM | அ+அ அ- |

பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேசினர்.
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, நாள்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு, பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பேராசிரியர்கள் சேகர், பாலசுப்ரமணியன், ஆசிரியர் இதயராஜா உள்ளிட்டோரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.அ. பாரதி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் இரா. மதியழகன், சாமு. தர்மராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் சந்தித்து பேசினர்.