மகளை காணவில்லையெனதந்தை புகார்
By DIN | Published On : 29th January 2019 04:22 AM | Last Updated : 29th January 2019 04:22 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை காவல் சரகம், திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சந்தியா (17). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தஞ்சாவூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 16ஆம் தேதி தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கிராமத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்ற சந்தியா மீண்டும் வீட்டிற்கு வரவில்லையாம். உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தந்தை மா.சந்திரன் அளித்த புகாரின் பேரில் அம்மாப்போட்டை போலீஸார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.