முதியோர் இல்லத்துக்குநல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 29th January 2019 04:20 AM | Last Updated : 29th January 2019 04:20 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை, கோட்டைக்குளம் தெருவில், தஞ்சை மாவட்ட தொலைத்தொடர்புத் துறை ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மறைந்த இரா.ஆதித்தனின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ஆதித்தன் வீட்டிலுள்ள அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், நினைவு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு அதே பகுதியிலுள்ள வள்ளலார் முதியோர் இல்லத்துக்கு ஆதித்தன் குடும்பத்தினர் சார்பில் சமையல் பாத்திரங்கள், தட்டு, குடம், மளிகைப்பொருள்கள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஆதித்தன் மகன்கள் நடிகர் விஜய் மக்கள் இயக்க நகரத் தலைவர் ஆதி.ராஜாராம், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.