"ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் வரவேற்புக்குரியது'

ஒரே நாடு,  ஒரே குடும்ப அட்டை திட்டம் வரவேற்கத்தக்கது என்றார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்.

ஒரே நாடு,  ஒரே குடும்ப அட்டை திட்டம் வரவேற்கத்தக்கது என்றார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகநூல் ஜோதிடர்கள் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஒரே நாடு,  ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று தங்களது ரேஷன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். இது வரவேற்கத்தக்கது. இதைச் சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எதிர்க்கின்றனர். இது மிகவும் தவறானது. 
புதிய கல்விக் கொள்கையில் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்வதற்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசம் ஒரு மாதம் என்பதை 6 மாதங்களாக நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் நிறைய கல்விச் சீர்த்திருத்தங்கள் தேவைப்படுகிறது. மழலையர் கல்வியில் தாய்மொழி மட்டுமே இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு மும்மொழிக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
பிளஸ் 2 முடித்த பிறகு கட்டாயம் ஓராண்டு காலம் ராணுவத்துக்குச் சென்று சேவை செய்யக்கூடிய நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். நீதி போதனைக் கல்வி முறை மாணவர்களுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். கல்விக் கொள்கையில் எங்களுடைய பரிந்துரைகளைப் பதிவு செய்ய உள்ளோம். ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியானது. அறிவியல் ரீதியாக உள்ள வானியலை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போதிக்க வேண்டும். இதை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றார் அர்ஜூன் சம்பத்.
அப்போது, இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி செயலர் பி. கார்த்திக்ராவ் போன்ஸ்லே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் ஜோதிட ஞான சிந்தாமணி என்ற நூலும், வளம் தரும் வாஸ்து என்ற குறுந்தகடும் வெளியிடப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com