வேலைவாய்ப்பு முகாமில்1,259 பேருக்கு பணி நியமன ஆணை

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 1,259 பேருக்கு பணி நியமன


தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 1,259 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலிருந்தும் தனியார் மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள், தனியார் வங்கிகள், மென்பொருள் நிறுவனங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள், இயற்கை அழகு சாதன விற்பனை நிறுவனங்கள் உள்பட பல தொழில் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று ஆள்களைத் தேர்வு செய்தன.
இந்த முகாமில் 10 ஆம் வகுப்பு முதல்  பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் என மொத்தம் 4,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில், 70 தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர்களால் நேர்காணல் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 1,259 பேருக்கு ஆட்சியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 
முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் கு. இந்துபாலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. பரமேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com