ஓலைப்பாடியில் அம்மா திட்டம் முகாம்
By DIN | Published On : 22nd July 2019 09:42 AM | Last Updated : 22nd July 2019 09:42 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், ஓலைப்பாடியில் அம்மா திட்டம் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்து, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்று, தீர்வு வழங்கினார். முகாமில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ராம்குமார், மண்டலத் துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சீமான்,சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் கார்த்திகேயன்,கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.