பட்டதாரி ஆசிரியரின் நிதியுதவி மூலம் அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் அளித்த ரூ. 1.50 லட்சம் நிதியுதவி மூலம் ஸ்மார்ட் வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் அளித்த ரூ. 1.50 லட்சம் நிதியுதவி மூலம் ஸ்மார்ட் வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
திருவையாறு அருகேயுள்ள விளாங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில், இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 125 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் கே. பெருந்தேவி ரூ. 1.50 லட்சம் நிதியுதவி செய்தார். இதன் மூலம், வகுப்புத் தளத்துக்கு டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, புராஜெக்டர், தொடு திரை, கணினி, டேபிள், நாற்காலி போன்றவை வாங்கி கொடுத்தார். இதுகுறித்து பெருந்தேவி தெரிவித்தது: இப்பள்ளிக்குக் கடந்த ஆண்டு கிராம மக்கள் சீர்வரிசை கொடுத்தனர். மேலும்,  இப்பள்ளியில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக என்னால் முடிந்த அளவுக்கு ரூ. 1.50 லட்சம் நிதியுதவி அளித்தேன். 
இதன் மூலம் ஸ்மார்ட் வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த ஸ்மார்ட் வகுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலமையாசிரியை விமலநாயகி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் மெய்யப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜன் குத்துவிளக்கேற்றி புதன்கிழமை தொடங்கி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com