ஹைட்ரோகார்பன் திட்டம்:  கிராமங்கள்தோறும்  போராட்டக் குழு அமைக்க முடிவு

ஹைட்ரோ கார்பன் திட் டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவதற்காகக் கிராமங்கள்தோறும் போராட்டக்

ஹைட்ரோ கார்பன் திட் டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவதற்காகக் கிராமங்கள்தோறும் போராட்டக் குழுவை அமைப்பது என காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் மத்திய,  மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவதற்காகத் தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் ஜூன் 18-ம் தேதி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கூட்டியக்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கிராமங்கள்தோறும் போராட்டக் குழுவை அமைப்பது, விவசாயிகளைச் சந்திப்பது, 10,000 விவசாயிகளைத் திரட்டி, பேரணியாகச் சென்று ஆட்சியரிடம் ஜூலை 9-ம் தேதி மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்டத் தலைவர் வீர. மோகன், செயலர் பா. பாலசுந்தரம்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலச் செயலர் சாமி. நடராஜன்,  மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன்,  விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன்,  தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் துரை. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com