சாத்தனூர் கோயில்களில் குடமுழுக்கு விழா
By DIN | Published On : 04th March 2019 08:56 AM | Last Updated : 04th March 2019 08:56 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதி சாத்தனூரில் உள்ள ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத மஹா சாஸ்தா அய்யனார் கோயில் மற்றும் திருமூலநாயனார் கோயிலில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா மார்ச் 1-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இரவு முதல் கால யாக பூஜையும், 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், இரவு நான்காம் கால யாக பூஜையும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கல வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்களுடன் கோயில்களுக்குக் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து அய்யனார் கோயிலிலும், திருமூலநாயனார் கோயிலிலும் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பின்னர், கோயில்களின் மூலவருக்கு மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.