மரம் அறுக்கும் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2019 08:58 AM | Last Updated : 04th March 2019 08:58 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் மரம் அறுக்கும் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குச் சங்கத்தின் கெளரவத் தலைவர் வாசு தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மரம் அறுக்கும் ஆலைகளில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு விபத்து சிகிச்சை வழங்க வேண்டும்.
வார விடுமுறை, மே தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை நாள்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் ஜோதி கந்தன், செயலர் சதீஷ்குமார், பொருளாளர் பூமிநாதன், ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், பட்டு கைத்தறி மாவட்டச் செயலர் மணிமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலர் வசந்த் வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.