நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை

கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோயில் பங்குனி

கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோயில் பங்குனி பெருவிழாவில் வெள்ளிக்கிழமை கல்கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா கொடியேற்றம் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. 
தொடர்ந்த விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவுக்கு எழுந்தருளினார்.  
விழாவில் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை பிரசித்தி பெற்ற கல் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கல்கருட பகவானை சன்னதியிலிருந்து முதலில் 2 பேர் சுமந்தனர். பின்னர் 4 பேர்,  அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என சுமந்து வந்தனர். பின்னர், வாகன மண்டபத்தில் சீனிவாசப் பெருமாள் காட்சியளித்தார். இந்த  கல் கருடசேவையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின்  வெளிப்புறமும்,  உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  விழாவின் 9ஆம் நாளான வரும் 20ஆம் தேதி திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com