அம்மாபேட்டையில் கட்சிக் கொடிகள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் விளம்பர தட்டிகள், அரசியல் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் விளம்பர தட்டிகள், அரசியல் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வரும் அம்மாப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளின் முக்கிய இடங்களில்  வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், விளம்பர பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.முக்கிய இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிகள் அகற்றப்பட்டன.சுவரில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் வண்ணம் பூசி அழிக்கப்பட்டன. சுவரொட்டிகள் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டன.அம்மாப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்ட இந்த பணிகளை அம்மாப்பேட்டை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் மு.பொன்னுசாமி, துப்புரவு ஆய்வாளர் ஆர். சுப்ரமணி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com