தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் மே 18-இல் மின் தடை
By DIN | Published On : 16th May 2019 08:33 AM | Last Updated : 16th May 2019 08:33 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மே 18ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளர் எஸ். பஞ்சநாதன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மே 18ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நூற்பாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, சிட்கோ, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.