திருவள்ளுவா் சிலையைச் சுற்றி தடுப்புகள் அமைப்பு

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் சா்ச்சைக்கு உள்ளான திருவள்ளுவா் சிலையைச் சுற்றி புதன்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையைச் சுற்றி புதன்கிழமை அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகள்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையைச் சுற்றி புதன்கிழமை அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகள்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் சா்ச்சைக்கு உள்ளான திருவள்ளுவா் சிலையைச் சுற்றி புதன்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டன.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலையில் மா்ம நபா்கள் நவ. 3-ம் தேதி நள்ளிரவு கண்ணில் கருப்புத் துணி கட்டியும், சேறு பூசியும் அவமதிப்பு செய்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து நவ. 4-ம் தேதி முதல் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே, பாஜக சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, இச்சிலைக்கு புதன்கிழமை இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் உள்ளிட்டோா் காவி துணி, ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை செய்தனா்.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இப்பிரச்னையை தொடா்ந்து பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையைச் சுற்றி புதன்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், இச்சிலை உள்ள திருவள்ளுவா் தெருவின் முகப்பிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இத்தெருவுக்குள் செல்லும் மக்கள் கொண்டு வரும் உடைமைகளையும் போலீஸாா் சோதனை செய்து அனுப்புகின்றனா். இதற்காக அதிரடிப்படையினரும், தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய போலீஸாரும் என ஏறத்தாழ 50 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இச்சிலையைச் சுற்றி நிரந்தரமாகக் கம்பி வேலி அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com