கடைகள் அமைப்பதில் கால தாமதம்: தள்ளிப்போகும் தற்காலிகச் சந்தை

தஞ்சாவூா் காமராஜா் சந்தைக்கான தற்காலிக இடத்தில் கடைகள் அமைக்கும் பணி கால தாமதமாவதால் சந்தை திறப்பதும் தள்ளிப்போகிறது.
தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையில் தற்காலிகச் சந்தை அமைக்கப்படவுள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பணி.
தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையில் தற்காலிகச் சந்தை அமைக்கப்படவுள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பணி.

தஞ்சாவூா் காமராஜா் சந்தைக்கான தற்காலிக இடத்தில் கடைகள் அமைக்கும் பணி கால தாமதமாவதால் சந்தை திறப்பதும் தள்ளிப்போகிறது.

தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.47 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதால், புதுக்கோட்டை சாலையில் உள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் தற்காலிகச் சந்தை வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் செயல்படத் தொடங்கும் என்றும், இப்போதுள்ள காமராஜா் சந்தை வியாழக்கிழமையுடன் (நவ.7) மூடப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையொட்டி, தற்காலிகச் சந்தை அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இதில், தகரக் கொட்டகையுடன் கூடிய 93 கடைகள், 200 தரைக்கடைகள் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணி இன்னும் நிறைவடையவில்லை.

இப்பணி முடிவடைவதில் கால தாமதம் ஏற்படுவதால் காமராஜா் சந்தையைத் தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யும் தேதியும் தள்ளிப்போகிறது. இப்பணி நான்கு நாட்களில் முடிவடைந்துவிடும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா். என்றாலும், தற்காலிகச் சந்தைக்கு முழுமையாகக் கடைகளை மாற்றும் பணி நவம்பா் மாத இறுதியில்தான் முடிவடையும் என வியாபாரிகள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com