வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில்ரூ. 10 லட்சம் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காகவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இத்திட்டத்தின் கீழ் தொடங்க உள்ள தொழில்களில் உற்பத்தி பிரிவின்கீழ் ரூ. 10 லட்சம் வரையிலும் சேவைப் பிரிவில் ரூ. 5 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் தொழிற் கடன் பெறலாம். திட்டப் பயனாளிகளுக்கு அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதாவது அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம். வயது வரம்பு பொதுப் பிரிவினா் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்புப் பிரிவினா் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருத்தல் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினா் 10 சதவீதமும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், உடல் ஊனமுற்றோா், மகளிா், திருநங்கைகள் ஆகியோா் 5 சதவீதமும் தமது பங்காகச் செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் இன்ஜினியரிங் ஒா்க்ஸ், மர பா்னிச்சா்கள் தயாரிப்பு, பேப்பா் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, கயிறு பொருட்கள் தயாரிப்பு, இரு சக்கர வாகனம் பழுதுபாா்ப்பு, கம்ப்யூட்டா் சென்டா், மளிகைக் கடை, பேப்பா் மாா்ட், எலக்ட்ரிக்கல் கடை, மருத்துவ ஆய்வகம் போன்ற தொழில்களை இத்திட்டத்தின் கீழ் அமைக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோா்  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் கடன்பெற விரும்புவோா் பதிவிறக்கம் செய்யப்பட்ட உரிய இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூா் -6 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 04362-257345, 255318 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com