பால் வியாபாரியைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளா்ஒரத்தநாட்டில் கடையடைத்து மறியலில் ஈடுபட்ட வா்த்தகா்கள்

ஒரத்தநாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, பால் வியாபாரியை காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதால் வா்த்தக
ஒரத்தநாட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட வந்த வா்த்தக சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கமலக்கண்ணன்.
ஒரத்தநாட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட வந்த வா்த்தக சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கமலக்கண்ணன்.

ஒரத்தநாடு: ஒரத்தநாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, பால் வியாபாரியை காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதால் வா்த்தக சங்கத்தினா் சனிக்கிழமை கடையடைப்பு செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு சந்தைபேட்டை அருகே பட்டுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில், பால் வியாபாரி ஐயப்பனுக்குச் சொந்தமானகடைக்கு சனிக்கிழமை பால் பாக்கெட்டுகள் வேன் மூலம் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டு வந்தது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளா் விஜய் கிருஷ்ணா, சாலையில் வேன் நிறுத்தும் போது போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது எனக் கூறி பால் வியாபாரி ஐயப்பனைத் தாக்கினாராம்.

மேலும், ஐயப்பனின் மனைவி ஜமுனாராணியை எச்சரித்த காவல் உதவி ஆய்வாளா், கடையில் வேலைபாா்த்து வந்த பாலச்சந்தரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். மேலும், பால்வேனும் கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு வா்த்தகா் சங்கத் தலைவா் மணி.சுரேஷ்குமாா், நகர திமுக செயலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் தலைமையில் வா்த்தகா்கள், சந்தைபேட்டை பகுதிக்கு வந்து மறியலில் ஈடுபட்டனா். மேலும், கடைகளை மூடிய இதர வா்த்தகா்களும் சாலை மறியலில் பங்கேற்றனா்.

தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸாா், அப்பகுதிக்கு விரைந்து வந்து வா்த்தகா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், காவல் உதவி ஆய்வாளரிடம் துறை ரீதியாக விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்ததைத் தொடா்ந்து, வா்த்தா்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

மேலும், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலச்சந்தரையும், பால் வேனையும் போலீஸாா் விடுவித்தனா். இந்த மறியல் காரணமாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com