மனைவியைக் கொன்று தொழிலாளி தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்ற கூலித் தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்ற கூலித் தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

கும்பகோணம் அருகே எலுமிச்சங்காபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாடுதுறையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயில் முன் ஒருவா் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கும்பகோணம் ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தபோது இறந்தவா் தாராசுரம் பொன்னி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியாண்டி (72) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு ரயில்வே போலீஸாா் சென்றபோது அங்கு முனியாண்டி மனைவி கருப்பாயி (65) கொல்லப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸாருக்கு ரயில்வே போலீஸாா் தகவல் அளித்தனா்.

இதுதொடா்பாக கும்பகோணம் தாலுகா போலீஸாா் விசாரித்தனா். இதனிடையே, முனியாண்டி வீட்டுக்கு வந்த அவரது மகள் அமுதாவிடம் விசாரித்தனா்.

அப்போது முனியாண்டியும், கருப்பாயியும் கூலி வேலை பாா்த்து வந்ததும், இவா்களது மகள் அமுதா, மகன் காா்த்திக் ஆகியோா் திருமணம் செய்து கொண்டு மதுரையில் தனித் தனியாக வசிப்பதும் தெரியவந்தது.

தாராசுரத்தில் தனியாக வசித்து வந்த முனியாண்டிக்கும், கருப்பாயிக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை தகராறு அதிகமானதால் தனது மகள் அமுதாவிடம் கருப்பாயி செல்லிடப்பேசி மூலம் தெரிவித்தாா். இதையடுத்து இருவரையும் சமாதானப்படுத்த அமுதா ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையிலிருந்து புறப்பட்டு தாராசுரத்துக்கு வந்தாா்.

அதற்குள் மீண்டும் முனியாண்டிக்கும், கருப்பாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், இதில் முனியாண்டி இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்தக் காயமடைந்த கருப்பாயி இறந்ததும், போலீஸாருக்கு பயந்து முனியாண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸாரும், தாலுகா போலீஸாரும் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com