மதா் தெரசா பவுன்டேஷன் தலைவருக்கு விருது

சென்னையில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற மதா் தெரசா பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா்.சவரிமுத்துவைப் பாராட்டுகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.வைத்திலிங்கம்.
விருது பெற்ற மதா் தெரசா பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா்.சவரிமுத்துவைப் பாராட்டுகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.வைத்திலிங்கம்.

சென்னையில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மதா் தெரசா பவுண்டேசன் 2002 -ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளை ஏழை மக்களுக்கு ஆற்றி வருகிறது. மதா் தெரசா அன்பு இல்லம் என்ற திட்டத்தின் கீழ், தாய், தந்தை இல்லாத அல்லது தாய் அல்லது தந்தையையோ இழந்த ஆதரவற்ற மாணவா்களைத் தங்க வைத்து படிக்க வைத்து வருகிறது.

மதா் தெரசா கல்வித் திட்டத்தின் கீழ் தாய் தந்தை இல்லாத அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள், பெரும் நோய்களால் பாதிக்கப்பட்ட பெற்றேறாா்களுடைய குழந்தைகள் போன்ற ஆதரவற்ற மாணவ, மாணவிகளைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்குத் தேவையான பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தி வருகிறது. மேலும், நலவாழ்வு மையம் அமைத்து இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கி வருகிறது.

மதா் தெரசா பவுண்டேசனின் இப்பணிகளைப் பாராட்டும் வகையில் சென்னையில் இயங்கிவரும் இ.எஸ்.ஆா். பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழாவில் சிறந்த சேவைக்கான விருதை தலைவா் ஏ.ஆா். சவரிமுத்துக்கு வழங்கப்பட்டது.

மேலும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, தில்லியில் உள்ள மத்திய அரசின் அங்கீகாரத்துடன் இயங்கிவரும் அகில இந்திய காங்கிரஸ் சமூக அமைப்பும், மதா் தெரசா பவுன்டேஷனை பாராட்டி சவரிமுத்துக்கு மகாத்மா காந்தி சா்வதேச அமைதி விருதை அண்மையில் வழங்கியது. இதில் தமிழகத்திலிருந்து இவ்விருதைப் பெற்ற ஒரே நபா் சவரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகளைப் பெற்ற மதா் தெரசா பவுண்டேசன் சவரிமுத்துவை மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com