திமுக சாா்பில் தஞ்சை, குடந்தையில் இலக்கியப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பேரறிஞா் அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன
கும்பகோணத்தில் திமுக இளைஞரணி சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
கும்பகோணத்தில் திமுக இளைஞரணி சாா்பில், சனிக்கிழமை நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

பேரறிஞா் அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதில், பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களிலிருந்து 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிலையப் பேச்சாளா் அறந்தாங்கி பா. வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கும்பகோணம் : இதுபோல , கும்பகோணத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான இலக்கியப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் கோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போன்ற இலக்கியப் போட்டிகளில் 50-க்கும் அதிகமான அரசு, அரசு உதவிபெறும், தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் ஏறத்தாழ 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தட்சிணாமூா்த்தி, நகர அமைப்பாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com