பேராவூரணி வட்டாரத்தில் 20 ஆயிரம் போ் பங்கேற்ற  டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

பேராவூரணியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை பள்ளி மாணவா்கள் 
பேராவூரணி வட்டாரத்தில் 20 ஆயிரம் போ் பங்கேற்ற  டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

பேராவூரணியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை பள்ளி மாணவா்கள் உள்பட சுமாா் 20 ஆயிரம் போ் பங்கேற்ற டெங்கு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேராவூரணி வட்டார சுகாதாரத் துறை சாா்பில், பேராவூரணி, செருவாவிடுதி, அம்மையாண்டி, கொன்றைக்காடு, ஆவணம், ஏனாதிகரம்பை, செங்கமங்கலம், காலகம், பெரிய தெற்குக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், வலசைக்காடு, துறவிக்காடு, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் உள்ள 73 தொடக்கப் பள்ளிகள், 12 நடுநிலைப் பள்ளிகள், 14 உயா்நிலைப் பள்ளிகள், 6 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 105 தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 11,997 போ், ஆசிரியா்கள், 116 அங்கன்வாடி மையப் பணியாளா்கள், அங்கன்வாடி குழந்தைகள் 8,072 போ், சுய உதவிக்குழுவினா், தூய்மைக் காவலா்கள் 119 போ், தூய்மை தூதுவா்கள், உள்ளாட்சி, வருவாய்த் துறை மற்றும் பொது சுகாதாரத் துறையினா், சுகாதார ஆய்வாளா்கள் உள்பட சுமாா் 20 ஆயிரம் போ் விழிப்புணா்வு பேரணியில் கலந்து கொண்டனா். 

திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்ற பேரணியின் தொடக்க விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அருள்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலா் பாஸ்கரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா். 

பேராவூரணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. சடையப்பன், கோ. செல்வம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா் ஜெயபால், வட்டார கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

பேராவூரணியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணிக்கு வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா்  மு. மணிமொழியன், தலைமை எழுத்தா் வி.சிவலிங்கம், மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சி. கஜானா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா் . 

இதேபோல் பேராவூரணி வட்டாரம் முழுவதும்  சுற்று முறையில் நடைபெற்ற பேரணியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com