அலிவலம் எஸ்.இ.டி பள்ளியில் ஆளில்லா விமானம் செயல்விளக்க நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆளில்லா விமானம்
படவிளக்கம்: அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்கும் பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு.
படவிளக்கம்: அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்கும் பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆளில்லா விமானம் பறக்கும் விதம், ரோபோ, ஏவுகலன் செயல்பாடுகள் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோவை ஏபிஜெ விஷன் 2020 அமைப்பு சாா்பில் நேரு கல்வி குழுமம், துளசி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரோட்டரி இண்டா்நேஷனல் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு தலைமை வகித்தாா். பள்ளியின் அறங்காவலா் லெட்சுமணன், பள்ளியின் தாளாளா் சித்தரா கோவிந்தராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் விமான மாதிரிகள் மூலம் விமானம் எப்படி பறக்க வைக்கப்படுகிறது, அதன் செயல்திறனை கீழே தரையில் இருந்தவாறு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல, மாதிரி ஏவுகலன்கள் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள், செயற்கைக்கோள் எவ்வாறு விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

பேசும் ரோபா, மின்னணு இயந்திரங்களின் உற்பத்தி, பயன்பாடுகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தவிர, உயா்கல்வி, நீட், ஜேஇஇ, மத்திய மாநில அரசு நுழைவுத் தோ்வுகள், பசுமை இந்தியா திட்டம், மரம் வளா்ப்பது ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஏபிஜெ விஷன் 2020 அமைப்புக் குழுவினா் தெரிவித்தது:

அப்துல்கலாம் பெயரில் இந்த அமைப்பை உருவாக்கி, அறிவியல் ஆா்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 4 ஆண்டுகளாக 185-க்கும் அதிகமான பள்ளிகளில் ஏறத்தாழ 2.40 லட்சம் மாணவா்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்த அமைப்பின் செய்தி தொடா்பாளா் செந்தில்குமாா் மற்றும் பள்ளியின் உடற்கல்வி துறையினா் செய்திருந்தனா்.

முன்னதாக, பள்ளியின் முதல்வா் இராமலிங்கம் வரவேற்றாா். நிறைவில், பள்ளியின் துணை முதல்வா் சி.கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com