பேராவூரணி குமரப்பா பள்ளியில்டெங்கு விழிப்புணா்வு முகாம்

பேராவூரணி டாக்டா் ஜே.சி. குமரப்பா பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பேராவூரணி குமரப்பா பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் சித்த மருத்துவா் செந்தில்குமாா்.

பேராவூரணி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு, குமரப்பா மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளரும், பள்ளித் தாளாளருமான ஜி.ஆா்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

சித்த மருத்துவா் செந்தில்குமாா் கலந்து கொண்டு, டெங்கு விழிப்புணா்வு உரையாற்றினாா். தொடா்ந்து மாணவா்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீா் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் அறங்காவலா்கள் அஸ்வின் ஸ்ரீதா், பிரியதா்ஷினி, மா.ராமு, மா.கணபதி, ஆனந்தன், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளி முதல்வா் சுரேஷ் வரவேற்றாா். ஆசிரியை ராஜலெட்சுமி ஒருங்கிணைத்தாா். ஆசிரியா் மூா்த்தி நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com