தொற்றுநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு நடவடிக்கை

பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக கொசுப்புழு ஒழிப்பு பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக கொசுப்புழு ஒழிப்பு பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் வி. சளந்தரராஜன் கொசுப்புழு ஒழிப்பு பணியை தொடக்கிவைத்துப் பேசியது:
தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், ஆங்காங்கே நீர் தேங்க வாய்ப்புள்ளது.  எனவே சேமித்து வைக்கும் நீரை மூடி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி நீர் தேங்கக் கூடிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசுப்புழு கண்டறியப்பட்ட நீரை வடிகட்டியோ அல்லது நீரை வெளியேற்றியோ கொசுப்புழுக்களை அழிக்க வேண்டும். குழி வெட்டி குடிநீர் பிடிக்கக் கூடாது 
கொசுப்புழு ஒழிப்புப் பணிக்காக வீடு தேடி வரும்  பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ். சந்திரசேகரன் துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com